search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு"

    லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை நீட்டிக்க மறுத்த ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு வரும் 30-ந்தேதி அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #LaluPrasadYadav #JharkhandHC
    ராஞ்சி:

    பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் பீகாரில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளார்.

    இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு அவருக்கு 5 வழக்குகளில் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மகன் திருமணத்துக்காக 3 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் அவர் தனது மகன் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    இந்த ஜாமீனை மருத்துவ காரணங்களுக்காக மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று லாலு சார்பில் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லாலு பிரசாத்துக்கு ஜாமீன் நீடிப்பு வழங்க முடியாது என்று மறுத்து விட்டதுடன் வருகிற 30-ந்தேதி அவர் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. #LaluPrasadYadav #JharkhandHC
    ×